undefined

உதயநிதி பிறந்தநாளுக்கு 10,000 பேருக்கு மட்டன் பிரியாணி... கெத்து காட்டிய அமைச்சர் மூர்த்தி!

 

நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள காஞ்சிவனம் மந்தை திடலில் 10,000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்தி இருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

வாழையிலைப் போட்டு மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் என களைக்கட்டியது விருந்து. இதில் மேலூர் தொகுதியைச் சேர்ந்த  திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பிரியாணியைப் பதம் பார்த்தனர்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சரும், மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி பங்கேற்று பிரியாணி விருந்தை துவக்கி வைத்தார். முன்னதாக மேடையில் பேசிய அவர், தேர்தல் பணியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றார். மேலும், கலைஞர் பெண் உரிமை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், பெண்கள் பெயரில் இலவச பட்டா என திமுக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்றார்.

எவ்வளவு காலம் கடந்தாலும் திமுக கோட்டையாக மாற பெண்களாகிய நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள்> உங்களுக்கு என்றும் துணை நிற்கிறோம். வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில் மேலூர் முதல் தொகுதியாக இருக்க வேண்டும் என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!