undefined

கொலைக்குள் கொலை.. விசாரணையில் அதிர்ந்த காவல்துறை.. அதிர்ச்சி பின்னணி!

 

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விசைத்தறி நெசவு தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அமிர்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமிர்தராஜ் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வந்தார். அமிர்தராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைவாணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமிக்கும், அமிர்தராஜுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த அமிர்தராஜ், விஜயலட்சுமியை கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது வீட்டில் வசித்து வரும் இளங்கோவனை அணுகினார். இருவரும் சேர்ந்து 2019ல் ஒரு சதித்திட்டத்தை தீட்டினார்கள்.

இளங்கோவனுக்கு தெரிந்த லாரி டிரைவரிடம் பேசினர். விஜயலட்சுமியை லாரியில் ஏற்றி அனைவரும் விபத்து என நம்ப வைத்து கொலை செய்தனர். மனைவி இறந்த பிறகு, அமிர்தராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையான ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளார். அதன்பின் கலைவாணியுடன் அமிர்தராஜ் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இளங்கோவன் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் குடும்பத்துடன் அமிர்தராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை காலி செய்யும்படி இளங்கோவனிடம் அமிர்தராஜ் கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன், ‘விஜயலட்சுமி கொலை வழக்கை போலீசில் புகார் செய்வேன்’ என மிரட்டியுள்ளார். இதையடுத்து காதலி கலைவாணியின் உதவியுடன் இளங்கோவனை கொன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அமிர்தராஜ், கலைவாணி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!