சொத்துக்காக சொந்த தங்கைகள் கொலை.. போலியாக நடித்த அண்ணனை கைது செய்த போலீசார்..!

 
சொத்துக்காக அண்ணன் தனது உடன்பிறந்த 2 சகோதரிகளை விஷம் கொடுத்து கொலை செய்துள்ள பயங்கரம் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்- இவரின் சகோதரி சோனாலி சங்கர் மோஹித் (வயது 34). கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் சோனாளியின் தங்கையான சினேகா சங்கர் மோஹித் (வயது 30), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அக்டோபர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னதாக சினேகா அதிகாரிகளிடம் தனது மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது சகோதரரின் மீது நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனது அக்காவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. எங்களது உணவில் விஷப்பொருள் ஏதேனும் கலந்திருப்பார் என கூறியிருக்கிறார். இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துக்காக சொந்த தங்கைகளே அண்ணனை கொலை செய்த பயங்கரம் தெரியவந்தது. அதாவது, கடந்த 2009 ஆண்டு கணேஷ் மோகித்தின் தந்தை வனத்துறையில் பணியாற்றி மறைந்துள்ளார். அவரது வேலையை கருணை அடிப்படையில் பெற்றுக் கொள்ள தாய் தனது மகள்களுக்கு அளிக்க விரும்பியுள்ளார். மேலும், அவரின் பெயரில் உள்ள பணத்தை மகனிடம் கொடுக்கவும், சொத்துக்களை சரி பங்காக மூவருக்கு பிரிக்கவும் எண்ணி இருக்கிறார்.

இதில் விருப்பமில்லாத கணேஷ் முதலில் சம்மதிப்பது போல நடித்து, பின் பிரச்சனை செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், போலியான ஆவணங்கள் கொண்டு சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றவும், வனத்துறை வேலையை தான் வாங்கவும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அவை தோல்வியுற்றன. இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தந்தையின் பணி மற்றும் வருவாயை பிரித்துக் கொள்ளலாம் என பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சொத்துக்களை பிரிக்க மனம் இல்லாத கணேஷ் தனது தங்கைகளை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரின் திட்டப்படி உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை விசாரணையில் உறுதிப்படுத்திய காவல்துறையினர், கொலைகளை செய்த கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.