undefined

 உதயநிதி துணைமுதல்வர் ஆவதும், நான் மாநில அரசியலுக்கு வருவதும் கட்சி முடிவு செய்யும்: கனிமொழி எம்பி

 
 

"உதயநிதி துணை முதல்வராவதும், நான் மாநில அரசியலுக்கு வருவதும் குறித்து கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி எ.ம்பி.யும், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சென்னை மைலாப்பூரில் மாணவர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார்.

அப்போது அரசியல் நுழைவு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி பதில் அளித்தார். அதில், தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்.

அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்றும் கனிமொழி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை