undefined

தாய், மகன் கொலை விவகாரம்.. இரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

 

திருநெல்வேலி மானூர் அருகே உள்ள குறிச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவரது தாய் கோமதியம்மாள் (65). அதே ஊரைச் சேர்ந்த சிராஜுதீன் என்கிற சிராஜ் (45), இவரது சகோதரர் லதீப் மற்றும் இவர்களது உறவினர் நாகூர் மீரான் (41). அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் சிராஜுதின் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சுப்பிரமணியனுக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் சிராஜுதீனும், பெண்ணும் உல்லாசமாக இருந்தனர். இதற்கு சுப்பிரமணியனும், அவரது தாயும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது சிராஜுதீனுக்கு கோபம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சுப்பிரமணியனும், அவரது தாயாரும் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்தனர். இதில் சிராஜுதீன், அவரது சகோதரர் லத்தீப், உறவினர் நாகூர் மீரான் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் சுப்பிரமணி மற்றும் அவரது தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிராஜுதீன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், சிராஜுதீன், நாகூர் மீரானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிராஜுதீனுடன் தொடர்பில் இருந்த பெண் விடுவிக்கப்பட்டார். லத்தீப் இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை