குடிபோதையில் நீச்சல்... தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகள் உயிரிழந்த சோகம்! 

 

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் அதிகம். இங்குள்ள ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளில் முறையான அனுமதியின்றி பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் முறையான பாதுகாப்பு இல்லாமல் நீச்சல் குளத்தில் மது அருந்திவிட்டு நீச்சல் அடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில், அண்ணாநகர் வாசன் யூ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அனுசத்யா (31) என்பவர் நேற்று தனது தாய் பிரேமாவின் பிறந்தநாளை கொண்டாட உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் முட்டுக்காடு சென்றார். பின்னர், அனுசத்யா தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு குடிபோதையில் தனது தோழிகளுடன் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துள்ளார்.

இவரது தோழி சைலஜா (29), அனுசத்யா ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிசார்ட் காவலர் பகதூர் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோர் நீச்சல் குளத்தில் குதித்து இருவரையும் மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் அவரை எங்கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அனுசத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சைலஜா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுசத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முட்டுக்காடு ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் பலியான சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்