மாமியாரை கொன்று எஸ்கேப் ஆன மருமகன்.. 14 ஆண்டுகளுக்கு பின் கையும் களவுமாக பிடித்த போலீசார்!
உடுமலைப்பேட்டை அருகே மாமியாரை வெட்டிக் கொன்று 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளி கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் மடத்திகுளம் தாலுகா வேடப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜன்-பத்மாவதி தம்பதி. கடந்த 28-06-2010 அன்று ராஜனுக்கும் அவரது மாமியார் காளியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மனைவி பத்மாவதி, மாமியார் காளியம்மாள் ஆகியோரை ராஜன் அரிவாளால் தாக்கினார். இதில் பலமாக காயமடைந்த மாமியார் காளியம்மாள் இறந்தார், அவரது மனைவி பத்மாவதியும் காயமடைந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்துக்கு தப்பிச் சென்ற ராஜன், கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார். அவருக்கு எதிராக மடத்திகுளம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து, அவரை கர்நாடக மாநிலம் மங்களூரில் தலைமைக் காவலர் மகேந்திரன் மற்றும் முதல்நிலை காவலர் நல்லபெருமாள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த தலைமைக் காவலர் மகேந்திரன், முதன்மைக் காவலர் நல்லபெருமாள் ஆகியோரை உடுமலை உட்கோட்டை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!