undefined

 ஏசியால் விபரீதம்...   2 குழந்தைகள் உட்பட   தாயும் உடல் கருகி  பலி!  

 
 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 35 வயது கவிதா. இவர் பின்மால் நகரின் மகாவீர் சௌராஹா பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் 10 வயது துருவ் , 5 வயது மகன் கௌரவ். இவர்கள் மூவரும் ஏசி போட்டு நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று  பிற்பகல் வீட்டின் ஒரு அறையில்  தூங்கிக் கொண்டிருந்தனர்.  

ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.   கவிதாவின் கணவர் சேத்தன் குமார் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சேத்தன் தனது புதிய பைக்கை சர்வீஸ் செய்வதற்காக வெளியே சென்றிருந்த சமயத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.  விபத்தின் போது, ​​தீ மளமளவென எரிந்ததால் அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  


அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த  காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​எரிந்த நிலையில் மூவரின் உடல்களையும் சடலமாக மீட்டனர்.  அறையில் இருந்து கறுப்பு புகை வெளியேறியதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததாகவும்  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் முற்றிலும் சோகமான விபத்து என கூறும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!