undefined

அதிர்ச்சி... பெற்ற தாயே குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்து கொலை  செய்த கொடூரம்!

 

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரில் வசித்து வருபவர்   மரிகா தாமஸ். 26 வயதாகும் இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.  அழுது கொண்டிருந்த குழந்தையை மரிகா தாமஸ் சமாதானம் செய்து தூங்க வைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார்.  குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில்  குழந்தையை வைத்துவிட்டார்.  மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் உடை , சுற்றி வைக்கப்பட்டிருந்த துணியும் சேர்ந்து  வெப்பத்தால் கருகியது.

வீடு முழுவதும்  எரிந்த புகை வாசனை வந்தது.   எரிந்த புகை வாசனை வருவது குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு   தகவல்  தெரிவித்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த காவல்துறையினர்   வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனார். ஆனால் குழந்தை பரிதாபமாக ஏற்கனவே உயிரிழந்திருந்தது.  


இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து   குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது   தெரிய வந்துள்ளது.  குழந்தையை தொட்டிலில்  தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க