undefined

 கல்லூரி மாணவிகளின் ஹாஸ்டல் பாத்ரூமில் Spy Camera | 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை விற்பனைச் செய்த கொடூரம்!

 
 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியின் பாத்ரூமில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்பை கேமிராவில் பதிவான 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைச் செய்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து மாணவிகள் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கி இன்று காலை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், அதே கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படிக்கும் விஜய் குமார் என்ற மாணவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். 

போலீசாரின் விசாரணையில், மாணவன் அதே கல்லூரியின் ஆண்கள் விடுதியில் தங்கி பிடெக் படித்து வந்திருக்கிறான். மாணவனின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தியதில், மாணவிகளின் விடுதி கழிவறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஸ்பை கேமிரா மூலமாக பதிவு செய்ததாகவும், இந்த வீடியோக்களை விஜய் குமாரிடம் இருந்து பிற மாணவர்கள் பணம் கொடுத்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவிகளின் பாத்ரூமில் ஸ்பை கேமரா பொருத்தி வீடியோக்களைப் பதிவு செய்ததில் வேறு மாணவர்கள் யாரும் ஈடுபட்டுள்ளனரா? மாணவிகளின் பாத்ரூமுக்குள் எப்படி ஸ்பை கேமிராவை பெண்களின் உதவி இல்லாமல் பொருத்தி இருக்க முடியும்? என்று போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை