கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் | அரசு மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தில் திடீரென 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், பேதியால் அவதிப்பட்டன. இவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சமாளித்து வந்தனர். விரைவில் சரிசெய்யும்படி தொடர் புகார் அளித்து வந்தனர். அதன் பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மோட்டார் சரி செய்து ஆகஸ்ட் 23ம் தேதி வெள்ளிக்கிழமை குடிநீர் வழங்கப்பட்டது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா