undefined

மாதம் ரூ1.40லட்சம் சம்பளம்/- மத்திய அரசு நிறுவனத்தில் பணியிடங்கள்!!

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில்   139 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணியிடங்கள்:  


உதவி என்ஜினியர் (சிவில்)- 18 பணியிடங்கள்
உதவி என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) -5 பணியிடங்கள்
அக்கவுண்டன்ட்- 24 பணியிடங்கள்
கண்காணிப்பாளர் (பொது)-11 பணியிடங்கள்


ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் -81 என மொத்தம் 139 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
கல்வித்தகுதி :  சிவில் என்ஜினியரிங்கில் பட்டம்  எலக்ட்ரிகல்  பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் அல்லது   பட்டய கணக்காளர்  பிரிவில் ஏதேனும் துறையில் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். 3  ஆண்டுகள் வரை பணி அனுபவமும் அவசியமே. 
கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு வேளாண்மை அல்லது உயிரியில், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி உட்பட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.  
வயது வரம்பு :  30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 


 விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 செப்டம்பர் 2023. 
தேர்வுகள் ஆன்லைன் மூலமே நடத்தப்படும்.  
தேர்வுக்கட்டணம்: பொதுப்பிரிவினர்  ரூ1,450/- 
எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்  -ரூ.400/-  
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும் 


மாதச் சம்பளம் :  ரூ.29,000 முதல் 93,000 வரை 
 விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பணியில் அமர்த்தப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, அம்பத்தூர், குரோம்பேட்டை, கோவை, தூத்துக்குடி, திருச்சி மாதவரம், நாகர்கோவில், உடுமைலைப்பேட்டை  பகுதிகளில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பங்கள், தேர்வு குறித்த முழு அறிவிப்புகளை தெரிந்து கொள்ள https://cwceportal.com/Careers/Guidelines/11/11_R_4745_1692941703115_b378acb9-9516-46b7-941c-be766ec79440.pdf  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை