undefined

செம வைஃப்... பஜனைப் பாடலை தலையசைத்து ரசித்த குரங்கு.. நெகிழ்ச்சி வீடியோ!

 

அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், நிஜமாகவே இது செம வைஃப் என்பார்கள். அத்தனை தாள கதியோடு தலையசைத்து பாடலை ரசித்துக் கேட்கிறது குரங்கு. நந்தினி வெங்கடாத்ரி என்ற பெண்மணி தனது X இணையதளத்தில் ஒரு குரங்கு உணவுக் கடையில் ராம் பஜனை பாடும் வீடியோவை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Loading tweet...


அந்த வீடியோவில், ஒரு பெண் அமர்ந்திருந்த மேஜையின் அருகே ஒரு குரங்கு அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பெண் குரங்கை விரட்டாமல் ஸ்ரீராம் ஜெயராம் என்று கோஷமிட்டுள்ளார். இதையடுத்து குரங்கு திடீரென மடியில் ஏறியது.

அப்போது அருகில் இருந்தவர்கள் பெண்ணின் பின் பஜனை முழக்கமிட்டனர். அப்போது அந்த குரங்கு பெண்ணின் தோளில் சாய்ந்து கொண்டு பாடலுக்கு தலையை ஆட்டியது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது லைக்ஸை குவித்து வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா