undefined

பணம் மோசடி வழக்கு.. தலைமறைவான நபர் சென்னையில் கைது!

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திர குமார் நட்வர்லால் (40). நண்பருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் தனது நண்பரை ஏமாற்றி ஏராளமான பணத்தை அபகரித்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.இதையடுத்து, அகமதாபாத் பெருநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உபேந்திர குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து உபேந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், உபேந்திர குமார் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று, தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து, அகமதாபாத் போலீசார், உபேந்திர குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். கூடுதலாக, 2021 இல் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் (LOC) அனுப்பப்பட்டது.இந்நிலையில் லண்டனில் இருந்து அபுதாபி வழியாக எதிஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்து, பயணிகளை அனுப்பி வைத்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த உபேந்திர குமார், இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சென்னை வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் சரிபார்த்தபோது, ​​பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறல் வழக்குகளில் கடந்த 3 ஆண்டுகளாக அகமதாபாத் பெருநகர காவல்துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் உபேந்திர குமாரை கைது செய்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், குடியுரிமை அதிகாரிகள் அகமதாபாத் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அகமதாபாத் மாநகர காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் உபேந்திர குமாரை கைது செய்து அகமதாபாத் அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத்தைச் சேர்ந்த நபர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!