undefined

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்... மூளையை வறுத்து சாப்பிட்டவர் பரபரப்பு வாக்குமூலம்!

 

இளம்பெண் கொலைச் செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக உல்லாசத்திற்குப் பின் இளம்பெண் கொலையாளியை மிரட்டியதும், பக்கத்து வீடுகளில் கூறி விடுவேன் எனக் கூறி  பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. நேற்று சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்ணை சுத்தியலால் தாக்கி சூட்கேசில் போட்டு சாலையில் வீசிய சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மணிகண்டன் தீபாவின் உடலை சூட்கேசில் ஏற்றி சாலையில் வீசும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மணிகண்டன் உடலை சூட்கேஸில் சாலையில் இழுத்துச் செல்வதைக் காணலாம், இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, சூட்கேஸை காலியான இடத்தில் வீசிவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார்.

இதற்கிடையில், துரைப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 17ம் தேதி, தீபாவை மணிகண்டன் வீட்டிற்கு வரவழைத்து, அன்று இரவு பணத் தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மணிகண்டன், தீபாவை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. தீபாவின் உடலை இரண்டு நாட்களாக வீட்டில் வைத்திருந்த மணிகண்டன், நேற்று (செப்டம்பர் 20) காலை தனது வீட்டுக்கு உறவினர்கள் வருவதை அறிந்த மணிகண்டன், 3000 ரூபாய் மதிப்பிலான புதிய 6 அடி சூட்கேஸை வாங்கி, நள்ளிரவு 2 மணியளவில் தீபாவின் உடலை அதில் வைத்து வீசியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!