முதல் கோப்பில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி... 9.3 கோடி விவசாயிகள் பயனடைகிறார்கள்!

 
நேற்று இரவு 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்நிலையில், பிரதமராக பதவியேற்ற பின்னர், பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.  

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, பிரதமர் மோடி, “எங்களுடையது கிசான் கல்யாணுக்கு முழு அர்ப்பணிப்புள்ள அரசு.  எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது.  
வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!