மோடி 3.0.. 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு.. பகீர் தகவல் வெளியீடு!

 

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி 3வது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், புதிய மோடி அரசின் 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தேர்தல் உரிமை அமைப்பான சொசைட்டி ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ஏடிஆர்) உறுதிப்படுத்தியுள்ளது. 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்பு பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளும், 2 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும், 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!