undefined

 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

 தமிழகத்தில் இன்று நவம்பர் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ” செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தமிழக கரையை நோக்கி நகர்வதால், திங்கட்கிழமை நவம்பர் 25 முதல் நவம்பர் 28 ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  

இந்நிலையில் கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 24ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!