இன்று முதல் 7 நாட்களுக்கு  மிதமான மழை!  

 


 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  அதே போல்  கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது.


கேரளாவை பொறுத்தவரை  தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழகத்தில் சில பகுதிகளில்  மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கோவை, மாவட்டங்களில் மிதமான மழையும்,  அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.


இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தகவல் மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  கர்நாடகாவில் ஜூலை 5,6,7ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.  கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!