undefined

ஆகஸ்ட் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

 

 தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில்  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். இந்த மழை ஆகஸ்ட் 29 வரை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது . இன்றும் நாளையும்  மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில்  சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக்  கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை