undefined

 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... குடை எடுத்திட்டு போங்க!

 
 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஜூலை 27ம் தேதி முதல் ஜூலை 30 ம் தேதி வரை தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 28 ம் தேதி வரை  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, வடக்கு வங்கக்கடல் வடக்கு அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  வீசக்கூடும். தெற்கு, வடக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தெற்கு, வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல்பகுதிகள் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேசுத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல், வடமேற்கு தெற்குப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த  நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!