undefined

’’போட்டியின்றி சைலண்டா ஓடிடி-க்கு வரும் மிஷன் அத்தியாயம் 1’’.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!

 

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  படம் மிஷன் அத்தியாயம் 1. இதை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். ஆக்‌ஷன் கலந்த இப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடித்த இயல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்தது.

தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்திற்கு போட்டியாக வெளியான இப்படத்திற்கு முதலில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததையடுத்து, திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், படம் பாக்ஸ் ஆபிஸில்  நல்ல வசூலை பெற்றது.

பொங்கலுக்கு வெளியான அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் போட்டியாக ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி அயலான் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9ஆம் தேதியும், அதே தேதியில் கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. ஆனால் இதனுடன் பொங்கலுக்கு வெளியான மிஷன் அத்தியாயம் 1 ஓட்டியில் தாமதமாக வெளிவருகிறது.

இதன்படி மிஷன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.போட்டியாக ஓடிடியில் வெளியானால் படத்தின் ரீச் எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதால் ஒரு வாரம் தாமதமாக ஓட்டியில்  வெளியாகிறது. பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. அதுமட்டுமின்றி அடுத்த வாரம் மிஷன் படத்திற்கு போட்டியாக எந்த படமும் ஓடிடியில் வெளியாகாது என்பதால் படக்குழு இந்த ஸ்மார்ட் முடிவை எடுத்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க