undefined

மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட்... அசால்ட்டாக பட்டத்தை தட்டிப் பறித்த மாணவி!

 

பல அழகிகள் கலந்துக் கொண்ட வெளிநாட்டு இந்தியர்களுக்கான மிஸ் இந்தியா வேர்ல்டுவைட் 2024 போட்டியில் அசால்ட்டாக பட்டத்தைத் தட்டிப் பறிந்தார் அமெரிக்காவில் வசித்து வரும்  மாணவி துருவி படேல்.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்தியா விழா குழுவினர், மிஸ் இந்தியா வேர்ல்டு வைட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 31வது ஆண்டாக நடத்தப்பட்டாலும் இந்தியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தகவல் அமைப்பு மாணவி துருவி படேல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.


சுரினாமைச் சேர்ந்த லிசா அப்டோல்ஹாக் முதல் ரன்னர் அப் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த மாளவிகா ஷர்மா இரண்டாவது ரன்னர் அப் பெற்றனர். திருமாணவர்களுக்கான பிரிவில், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த SuAnn Mouttet பட்டத்தை வென்றார் மற்றும் Guadeloupe ஐச் சேர்ந்த Sierra Suret மிஸ் டீன் இந்தியா குளோபல் பட்டத்தை வென்றார். நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ரேயா சிங் மற்றும் சுரினாமைச் சேர்ந்த ஷ்ரத்தா டெட்ஜோ முதல் மற்றும் இரண்டாம் ரன்னர் அப்களாக அறிவிக்கப்பட்டனர்.

பட்டத்தை வென்ற பிறகு பேசிய துருவி படேல், தான் பாலிவுட் நடிகையாகவும், யுனிசெஃப் தூதராகவும் ஆசைப்படுவதாக கூறினார். “மிஸ் இந்தியா குளோபல் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத கௌரவம். இது ஒரு கிரீடத்தை விட அதிகம் - இது எனது பாரம்பரியம், எனது மதிப்புகள் மற்றும் உலகளவில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது, ”என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!