நடுவானில் திக் திக் நிமிடம்.. காற்றில் அலை பாய்ந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்.. பதறிய பயணிகள்!

 

யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் 787 விமானம் நியூ ஜெர்சியின் டெல் அவிவ் நகரில் இருந்து நெவார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கியபோது நியூஜெர்சியில் பலத்த காற்று மற்றும் பிற நிலைமைகள் காரணமாக தரையிறங்க முடியவில்லை.

இதையடுத்து, அந்த விமானம் அங்கிருந்து நியூயார்க்கில் உள்ள ஆரஞ்சு கவுண்டி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அந்த நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டது. பின்னர் காற்றின் வேகத்தால் நடுவானில் தத்தளித்தது.

 இதனால் விமானத்தில் பயணம் செய்த பல பயணிகளுக்கு குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த மொத்தம் 300 பயணிகள் பாதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன் பிறகு அவர்களின் பதற்றம் தணிந்து சீரான நிலைமைக்கு வந்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்