undefined

சென்னையில் பரபரப்பு... சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

 

வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி கடந்த 18ம் தேதி இரவு 7 மணியளவில் மலம் கழிக்க புதருக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது திடீரென அவர்களில் ஒருவர் சிறுமியின் வாயில் துணியை வைத்து மற்ற இருவரும் இழுத்துச் சென்றனர். பின்னர் மூவரும் சேர்ந்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

அப்போது சிறுமி வெளியே வரும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களிடம் நடந்த விவரங்களையும் சிறுமி கூறினார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உருட்டுக்கட்டையுடன் மூவரையும் தேடினர். 2 பேர் தப்பியோடிய நிலையில், ஒருவரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தர் (21), 2 சிறுவர்கள் (16) ஆகிய 3 பேரை கைது செய்து சிறுமி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!