அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு டிச.18ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த வழக்கில் மொத்தம் 108 சாட்சிகள் உள்ள நிலையில் இதுவரை 78 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினர் யாரும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணையில் ஓய்வு பெற்ற முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி பெருமாள் சாமியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
கடந்த எட்டு வாய்தாவாக நடைபெற்ற இந்த குறுக்கு விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் முன்னாள் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தங்கச்சாமி என்பவரிடம் வழக்கு தொடர்பாக குறுக்கு விசாரணை செய்ய மனு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த சார்பு நீதிமன்ற நீதிபதி சுஷ்மிதா வருகிற டிசம்பர் 18ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஓய்வு பெற்ற முன்னாள் ஏ.டி.எஸ்.பி தங்கச்சாமியிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!