undefined

குட் நியூஸ்... மழை விடாமல் பெய்தாலும்  மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்!

 

 தமிழகத்தில் நேற்று வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி  காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே நவம்பர் 30ம் தேதி இன்று சனிக்கிழமை மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட   பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும்.இந்நிலையில் பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்   "சனிக்கிழமை கால அட்டவணையின்படி இன்று நவம்பர் 30ம் தேதி  மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.  "மெட்ரோ ரயில் சேவைகள் தாமதம் இல்லாமல் வழக்கம்போல் தொடங்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வாகனங்களை இன்று முதல் கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  உதவி தேவைப்பட்டால் 1800 425 1515, மகளிர் உதவி எண் - 155370 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!