undefined

அலறி துடித்து மருத்துவ மாணவி... அரசு மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்!

 

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் வேலூரில் மாவட்டம், குடியாத்தத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய 2ம் ஆண்டு நர்சிங் பயிற்சி படித்து வரும் மாணவி ஒருவர் இரண்டு மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் எஸ்.பாபு, மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சடைந்த மாணவி கூச்சலிட்டப்படியே அறையிலிருந்து வெளியே ஓடி வந்து இது குறித்து சக செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளிடம் அழுதபடியே கூறியுள்ளார்.  தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்ததும், உடனடியாக பெற்றோர்கள் மாணவியையும் அழைத்துக் கொண்டு குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி, மருத்துவர் பாபு மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 
அரசு மருத்துவர் பாபு தலைமறைவான நிலையில், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா