மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீதம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலக் அகர்வால் . 23 வயதான இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். இவர் பெங்களூருவில் பெற்றோருடன் தங்கி இருந்து, தனியார் மருத்துவ கல்லூரியில் பாலக் அகர்வால் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார்.
குறிப்பிட்ட நாளில் பாலக்கின் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த பாலக் அகர்வால் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தாய் வீட்டுக்கு திரும்பிய போது தனது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரியில் நடந்த சில தேர்வுகளில் பாலக் அகர்வால் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா