பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.... யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் MDR கட்டணம்?

இந்தியா முழுவதும் சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி ஷாப்பிங் மால்கள், காம்ப்ளெக்ஸ்கள் வரை யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. 2022 முதல் இந்தக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் கொண்டுவர இப்போது மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இப்போது, வாடிக்கையாளர்கள் செய்யும் UPI அல்லது RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. MDR கட்டணங்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டால் அது UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், அவர்கள் செலுத்தும் தொகையைப் பெறும் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்புடைய துறைகள் இப்போது இதை பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பெரிய வணிக நிறுவனங்கள் விசா, மாஸ்டர்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தைச் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் இனி UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் MDR கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையான UPI க்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் இந்தத் துறையில் உள்ள பல வணிக நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவது கடினமாகிவிடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!