இனி தனியார் மருத்துவமனையிலும் மகப்பேறு உதவித் திட்டம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
பொது சுகாதார இயக்குநரகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் (எம்ஆர்எம்பிஎஸ்) கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கத் தொடங்கியுள்ளது. 2017ம் ஆண்டு வரை முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு ஒப்புதல் அளித்தது.
2018 ஆம் ஆண்டில், இது மத்திய அரசின் பிரதான் மந்திரி மா-த்ரு வந்தனா யோஜனாவுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை இத்திட்டத்தின் மூலம் 1.20 கோடி கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 841 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளை பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிப் பெண்களும் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து வவுச்சர்களைப் பெற முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களிடம் தெரிவித்து, கருத்தரித்த 12 வாரங்களுக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு 14,000 ரொக்கம் மற்றும் 4,000 மதிப்பிலான பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பதிவு செய்த கர்ப்பிணிகளுக்கு முதல் நான்கு மாதங்களுக்குள் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனிடையே, கர்ப்பிணிப் பெண்களின் உடல் திறனை மேம்படுத்த ரூ.2,000 மதிப்பில் சத்துணவு நிதி வழங்கப்படுகிறது.
அதன்பின், 6வது மாதத்தில், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான நிதி வழங்கப்படுகிறது. மகப்பேறு காலம் முடிந்த நான்காவது மாதத்தில் இரண்டாவது தவணையாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ரூ.2000 வழங்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!