தொழிலதிபருடன் ரகசிய திருமணமா..? கண்ணீர் விட்டு அழுத நடிகை அஞ்சலி..!

 

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அஞ்சலி அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார். அந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த நடிகை அங்காடித் தெரு. இந்தப் படம் சென்னையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அவல நிலையை காட்டியது.அங்காடி தெரு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.



இந்தப் படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த படமான எங்கேயும் எப்போதும் அஞ்சலியின் நடிப்பு பிரமாதம். இதில் அவரது அழகு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தது.நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலியின் ஜோடி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. மங்காத்தா, இறைவி , கலகலப்பு என ஒரு சில படங்களில் நடித்த அஞ்சலி திடீரென காணாமல் போனார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வந்தன. அதன் பிறகு அஞ்சலி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர் அமெரிக்கா சென்று குடியேறியதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில் உடல் எடையை அதிகரித்து வந்த அஞ்சலி, உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமண வதந்திகள் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். நடிகர் ஜெய்யை நான் காதலிப்பதாக முதலில் கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனக்கே தெரியாமல் நான் திருமணம் செய்து கொண்டதை நினைத்து பலமுறை அழுதுள்ளேன் என அஞ்சலி பேட்டியில் கூறியுள்ளார்.இதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் விட்டு அழுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கான வாழ்க்கை வரும் பொழுது திருமணம் செய்துகொள்வேன் என்று மிகவும் எமோஷனலாக அந்த பேட்டியில் பேசி உள்ளார் நடிகை அஞ்சலி. மீண்டும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க