undefined

 மாவோயிஸ்ட் தலைவர் விக்ரம் கவுடா என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 
 


கர்நாடகா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். சிக்மகளூர் - உடுப்பி எல்லையில் உள்ள சீதம்பைலு வனப்பகுதியில் நேற்று கடும் என்கவுன்டர் நடந்தது.

மாவோயிஸ்ட் ராணுவ நடவடிக்கைகளின் தலைவரான கவுடா, தென்னிந்தியாவின் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர். கடந்த சில நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜ புரா, கார்கலா, உடுப்பி போன்ற பகுதிகளில் கவுடாவின் நடமாட்டம் இருந்தது. இந்த பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016 நிலம்பூர் என்கவுண்டரில் இருந்து தப்பியவர் மாவோயிஸ்ட் கமாண்டர் விக்ரம் கவுடா.

கர்நாடக போலீசார் மற்றும் நக்சல் தடுப்புப் படையினர் ஹிப்ரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 5 மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த என்கவுண்டரில் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டரின் போது முண்ட் கரு லதா, ஜெயன்னா மற்றும் வனஜாக்ஷி என 3 மாவோயிஸ்ட் தலைவர்கள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து உடுப்பிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!