மினி பட்ஜெட்டில் பேரெழில் கொஞ்சும் மாஞ்சோலை... கெத்தா சுத்தி பாக்கலாம்... !
விடுமுறைக்கு சுற்றுலா போகணும்னு யோசிச்சாலே வெளிநாட்டில அது இருக்கு, வெளி மாநிலங்களில் இந்த இடம் அப்படின்னு தான் யோசிப்போம். பேசுவோம் .திட்டமிட்டுவோம். நம்ம ஊருக்கு பக்கத்திலேயே சில மணி நேர பயணத்திலேயே பேரெழில் கொஞ்சும் பல இடங்கள் இருக்கு. சுற்றுலாப் பயணிகளின் காலடி தடம் பதியாக பல இடங்கள் தமிழ்நாட்டிலேயே ஏகமா கொட்டிக் கிடக்கு. அப்படி ஒரு இடம் தான் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் மாஞ்சோலை அமைந்துள்ளது.
இந்த மாஞ்சோலையானது பசுமையும் இயற்கையின் அழகும் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இது மற்ற மலை சுற்றுலா தலங்களைப்போல அல்லாமல் சற்றே மாறுபட்டது. இந்த மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, நாலுமுக்கு, அப்பர் அணைகள் அமைந்துள்ளன ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை சுற்றுலா தளங்களை போல இங்கே யாரும் அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. கட்டுப்பாடுகள் அதிகம்.
பசுமையும் அழகும் நிறைந்த இந்த மாஞ்சோலை பேரழில் கொண்டது. மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ அல்ல. அத்துடன் புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கே தனி வாகனத்தில் சுற்றுலா செல்ல வேண்டும் எனில் வனத்துறையின் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆதார் உள்ளிட்ட ஐடி கார்டுடன் சென்று, அங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். டூர் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே திட்டமிட வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், மாஞ்சோலைக்கு செல்ல இருப்போரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், வண்டி எண் போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். வனத்துறையினர் அனுமதி கொடுத்த பிறகு, அந்த அனுமதி சீட்டை ஜெராக்ஸ் காபிகளை எடுக்க வேண்டும். மாஞ்சோலை செல்லும் வழியில் இருக்கும் செக்போஸ்டில் காண்பிக்க வேண்டி இருக்கும். இந்த வழிமுறையானது மாஞ்சோலையில் தங்காமல் மாலையில் கீழே வரும் வகையில், ஒரு நாள் டூருக்கு திட்டமிடுபவர்களுக்கானது.
அதே சமயம் மாஞ்சோலையில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இரவில் தங்கி சுற்றிப் பார்க்க விரும்பினால், அதற்கான விதிமுறைகள் வேறு. அவ்வாறு செல்ல விரும்புபவர்கள் https://kmtr.co.in/ என்ற இணைய முகவரியில் பெயர், வண்டி எண், தங்கும் நாட்களை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.கடந்த சில நாட்களுக்கு முன் மாஞ்சோலை அருகில் உள்ள ஊத்து நாலுமுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.
இதனால் செப்டம்பர் 19ம் தேதி முதல் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து வனத்துறையினரின் தீவிர முயற்சிக்குப் பிறகு அரிசி கொம்பன் யானை அடர் வனத்திற்குள் விரட்டி அடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரிசி கொம்பன் யானையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது. யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை வனத்துறை உறுதி செய்தது. இதனால் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க