மணிப்பூர் பெண் கொலை விவகாரம்.. சிதைந்த முகம், 99% எரிந்த உடல்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!
நவம்பர் 7 ஆம் தேதி, மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சில சமூக விரோதிகள் நுழைந்து, ஒரு பெண்ணைக் கடுமையாகத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, அவரது உடலில் தீ வைத்து எரித்தனர். மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அசாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரியில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பெண்ணின் உடல் முழுவதும் கருகிய நிலையில், பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, மணிப்பூர் பெண்ணின் உடல் 99% எரிந்ததாகவும், எலும்புகள் கூட கருகியதாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், முக அமைப்பு சிதைந்துள்ளதாகவும், கை, கால்கள் சிதைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் கொல்லப்படுவதற்கு முன்பு அனுபவித்த கொடூரமான சித்திரவதை மற்றும் வலியை வெளிப்படுத்தியுள்ளது. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தின் போது கணவர் மற்றும் அவரது குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!