undefined

குழப்பத்தில் வனத்துறை... வயநாட்டில் ஆட்கொல்லி புலி மர்மமான முறையில் சடலமாக மீட்பு! 

 
புலி

கேரள மாநிலத்தில் வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவரை திடீரென அந்தப்பக்கமாக வந்த  ஆண்புலி கடித்து கொன்று பாதி உடலை தின்று விட்டு போய்விட்டது.  அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது.

புலி


இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியில்  நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய போது சுடப்பட்டது.
ஆனாலும் புலி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.  இந்நிலையில் அந்தப் புலி இன்று காலை அங்குள்ள வீட்டின் பின்புறம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பின்னர், அந்த புலி ராதாவை கொன்ற அந்த மனித உண்ணும் புலிதான் என வனத்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.


இன்று அதிகாலை 2.30 மணிக்கு  பிரியதர்ஷினி எஸ்டேட் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலில் இருந்த காயமே புலியின் மரணத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம், இது மற்றொரு புலியுடன் மோதியதில் இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.   மரணத்திற்கான காரணத்தை அறிய விரிவான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.  அதன்படி இப்பொது, இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!