undefined

தாய் திட்டியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

தூத்துக்குடி  மாவட்டம் முத்தையாபுரத்தில் வேலைக்கு செல்லுமாறு தாயார் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கோட்டைசாமி மகன் இசக்கிராஜா (24). இவர் தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஊருக்கு வந்தவர் பின்னர் வேலைக்காக சென்னைக்கு செல்லவில்லை. இதனால் அவரது தாயார் கண்டித்து உள்ளார். 

இதனால் மன வேதனை அடைந்த இசக்கி ராஜா நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கினார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!