ஒரே நாளில் கிலோ ரூ.3,000 எகிறிய மல்லிப்பூ தை அமாவாசை... சுபமுகூர்த்த நாட்கள் எதிரொலி!

 

தை அமாவாசை, தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, அடுத்தடுத்து வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள் என்று ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000 க்கு எகிறியது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுவாகவே பண்டிகைக் காலங்களில் பூக்கள் விலை ஏறுவது வாடிக்கையாகி விட்டது. தை அமாவாசை மற்றும் தை  மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், இன்று மல்லிகையின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்றைய காலை விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ரூ.2000க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இன்று மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்திற்கும், முல்லைப்பூ கிலோ ரூ.2000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தை அமாவாசை மற்றும் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டும், அடுத்தடுத்து சுப முகூர்த்த தினங்கள் வருவதாலும் இந்த விலை உயர்வு என்றும், பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!