நாளை ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்... ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 

 தமிழகத்தில் அரசுத் துறைகளின் சேவைகள் எளிதாகவும் உடனடியாகவும் மக்களை சென்று சேர பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதல்வர்  முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2023 டிசம்பர் 18ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின்  அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஜூலை 11ம் தேதி வியாழக்கிழமை தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில்  காலை 10.30 மணிக்கு அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழாவில் கலந்து கொள்கிறார். இங்கு நடைபெறும் அரசு விழாவில் முதல்வர்  கலந்து கொண்டு ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் எனும் திட்டத்தை தொடங்கி வைத்து, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.  இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில் மகளிர் பயணம் செய்வதற்காக பழைய பேருந்துகளுக்கு பதிலாக  20 புதிய பேருந்துகளை முதல்வர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதனையடுத்து  பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.  இதற்காக ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.  அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தர்மபுரி  பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முதல்வரின்  வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!