undefined

’குழந்தைகளை நன்றாக படிக்க வை’.. காவலர் எழுதிய கடிதம் சிக்கியது.. போலீசார் தீவிர விசாரணை!

 

கோயம்பேடு கே-10 காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை நுண்ணறிவு காவலராக இசக்கி முத்துக்குமார் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார்.  இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகன், தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இசக்கி முத்துக்குமாரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கி முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து இசக்கி முத்துக்குமாரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, அவரது வீட்டில் இசக்கி பாண்டியன் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் இசக்கி முத்துக்குமார் நீண்ட நாட்களாக இடமாற்றம் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காததால் மனமுடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!