ப்ளான் பண்ணிக்கோங்க... நாளை தமிழகம் முழுவதும் 615 சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி , தொடர்விடுமுறை, பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை ஏப்ரல் 5ம் தேதி வெள்ளிக்கிழமை, அடுத்து வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 925 பேருந்துகள் இயக்கப்படும். அதே நேரத்தில் சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!