பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

 
 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளியின் புகைப்படம், வீடியோ ஆகிய‌ ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், குற்றவாளியைப் பிடிக்க முடியாத நிலையில், குண்டு வைத்தவர் முசாவீர் சாஹிப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான சதி திட்டம் தீட்டியவர் அப்துல் மதீன் தாஹா என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு ஆயுதங்களை வாங்கித் தந்த கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த முஷ‌ம்மில் ஷெரீப் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்