undefined

மஹாவீர் ஜெயந்தி | இன்று அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு!

 
நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. நேற்று தீபாவளி முடிந்த நிலையில், நோன்பு எடுப்பவர்களும், வட இந்தியர்களும் இன்றும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த கெளதாரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதே போன்று இன்று நவம்பர் 1ம் தேதி மகாவீர் நிர்வான் தினம் (மகாவீர் ஜெயந்தி) கொண்டாடப்படும் நிலையில், இன்று தமிழக பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதே போன்று ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் இன்று ஒரு நாள் மூடப்படும் என்றும் இன்றைய தினம் அனைத்து இறைச்சி கடைகளிலும் இறைச்சி விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசைவம் உண்பவர்கள் இன்றைய தினம் உணவகங்களிலும் அசைவ உணவுகள் வாங்கி உண்பதைத் தவிர்த்திடுங்க. உங்க ஆரோக்கியம் மேம்படும். இறைச்சி விற்பனைக்கும், கடைகளைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இன்று புதிய இறைச்சி விற்பனைக்கு கிடைக்காததால் முதல் நாள் வாங்கி, பதப்படுத்திய இறைச்சியையே அசைவ உணவகங்களில் சமைக்கப் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் இன்று ஒரு நாள் அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்க.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்! 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!