300 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்... திருச்சியில் குவிந்த பக்தர்கள்!

 
 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருப்பிரம்பிநாதர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். 
லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில்  கட்டப்பட்டது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபிரம்பீஸ்வரர் கோவில். இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் .திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சிதலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் 2011 ஆம் ஆண்டு பாலாலயம் செய்து சிலைகளை ஒரு கட்டிடம் அமைத்து அதில் எடுத்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் திருப்பணி செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் சுற்றுச்சுவர் அமைக்க  ரூ. 17 லட்சம் மதிப்பீட்டிலும் கோவில் அர்த்த மண்டபம் சுவாமி மண்டபம் அம்பாள் சன்னதிக்கு ரூ. 23 லட்சம் மதிப்பீட்டிலும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை  உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 28 ந்தேதி யாகசாலை நிர்மானம் நடைபெற்றது.தொடர்ந்து  வாஸ்துசாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாக பூஜையுடன்  தொடங்கியது.

30 ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அடிபந்தனம், செய்தல் அஷ்டபந்தன சமர்ப்பணம், அருள் பிரசாதம் வழங்குதல்  நடைபெற்றது, தொடர்ந்து 3 ம்  யாகசாலை பூஜைகளும் இன்று அதிகாலை 4 ம் கால யாகசாலை பூஜைகளும் நடைப்பெற்றது.  தொடர்ந்து  கடம் புறப்பாடு நடைப்பெற்று காலை 6.45 மணிக்கு  மூலவர் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் ஒரே காலத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் கார்த்திகா மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார் விஸ்வநாதர் குழுக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!