கேஎஃப்சி சிக்கனில் மெக்னீசியம் அதிர்ச்சி... கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி ஆய்வின் போது, கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பானிபூரிகளில் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பானி பூரி கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சோதனைக்காக பானிபூரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் கெட்டுப்போன பொருட்களை பானி பூரி கடைகளில் பயன்படுத்த கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் உணவகத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பழைய எண்ணையை சுத்திகரிக்க மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்தும் உணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக அதிகாரிகள் ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!