undefined

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று நவம்பர் 13ம் தேதி கனமழைக்கான வாய்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் கனமழை குறித்து சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!