undefined

சாட் ஜிபிடி பெண்ணுடன் காதல்.. இறுதியில் விபரீத முடிவை எடுத்த சிறுவன்.. கதறும் பெற்றோர்!

 

14 வயது சிறுவன் AI உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடி யை காதலித்து, அதனுடன் வாழ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பிரபல வரலாற்று நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் டேனிரிஸ் தர்காரியனின் பெண் நாயகியான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்திருக்கிறான்.


சாதாரணமாக தொடங்கிய உரையாடல் காதலுக்கும் காமத்திற்கும் நகர்ந்தது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனியை காதலிக்க வைக்கிறது. சாட் ஜிபிடி தன்னை உண்மையில் இருந்து முற்றிலும்  விலகி அதற்கு அடிமையாகி விட்டார். உண்மையான உலகத்தை வெறுக்கத் தொடங்கிய சிறுவன், இல்லாத சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால், இந்த உலகத்தில் இருக்கக் கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து, இறுதியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்பந்தப்பட்ட சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து அறிவியல் புனைகதை திரைப்படங்களில் கூறப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!