undefined

காதல் திருமணம்... மூன்றே மாதத்தில் இளம்ஜோடி தற்கொலை.. உறவினர்கள் அதிர்ச்சி!

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் உதயபிரகாஷ், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ஹேமா என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஹேமாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் உதயபிரகாஷ், ஹேமா இருவரும் உதயபிரகாஷின் அண்ணி ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் ஜன்னலில் ஹேமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உதயபிரகாஷ் வீட்டின் முன்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்றே மாதத்தில் இளம்ஜோடி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!