undefined

’லவ் பிரேக் அப்’.. தற்கொலைக்கு தூண்டும் குற்றம் ஆகாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

காதல் முறிவு தற்கொலைக்கு தூண்டும் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில், 2007 ஆகஸ்டில், 21 வயது பெண் ஒருவர், 8 வருடங்கள் டேட்டிங் செய்தும், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், தற்கொலை செய்து கொண்டார். எனவே, தன்னை ஏமாற்றிய நபர் மீது பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது ஐபிசி பிரிவு 417 (ஏமாற்றுதல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் 376 (கற்பழிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கவில்லை.

எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, பெண்ணை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக காதலனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் *25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற காதலன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனவே, இந்த மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முந்தைய அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதி மிட்டல், காதலர்களுக்கு இடையே உடல் ரீதியிலான உறவில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டும் வகையில் வேண்டுமென்றே எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறினார்.

உடைந்த உறவுகள், உணர்ச்சி ரீதியில் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், தற்கொலைக்குத் தூண்டும் கிரிமினல் குற்றமாகாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சமூக மற்றும் குடும்ப உறவுகளில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படும் மன உளைச்சலின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்கின்றனர். அது பாதிக்கப்பட்டவரின் மனநிலையைப் பொறுத்தது என்று நீதிமன்றம் கூறியது. தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில், 306வது பிரிவின் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) தண்டனை விதிக்க முடியாது என்று கூறி, பெண்ணின் காதலனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!