குடிபோதையில் கப்பலை ஓட்டிய பெண்.. 1.5 மில்லியன் யூரோ பணம் இழந்ததாக அதிகாரிகள் வேதனை..!!

 

துணை பெண் கேப்டன் குடிபோதையில் கப்பலை ஓட்டியதால்  1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று Rhine நதி வழியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. அப்போது, கப்பல் கேப்டனுக்கு பதிலாக துணை கேப்டனாக இருந்த பெண் ஒருவர் அந்த கப்பலை ஓட்டிச்  சென்றுள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததால், Iffezheim என்னும் பகுதியில், நீர்மின் நிலையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பில் வேகமாக சென்று கப்பலை மோதியுள்ளார்.  கப்பல் மோதிய வேகத்தில், அந்த தடுப்பு உடைந்துவிட்டது. அது அந்த நீர்மின் நிலையத்துக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு ஆகும். ஆகவே, அது எளிதாக கிடைக்காது. தனிப்பட்ட முறையில் அதை தயாரித்து மீண்டும் நதியில் அதை அமைக்கவேண்டும்.அதற்கு ஒரு வருடம் வரை ஆகும். அந்த பெண் கப்பலை மோதியதால் சுமார் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. என்றாலும், அவரது கப்பலுக்கு பெரிய சேதம் ஒன்றும் ஏற்படவில்லை.

இந்த விபத்து ஒரு அசாதாரண விபத்து என்றும், இதுவரை நதியில் தாங்கள் இதுபோன்றதொரு விபத்தைக் கண்டதில்லை என்றும் அப்பகுதி காவல்துறையினர் கூறுகிறார்கள். விபத்து நடந்த நேரத்தில், நதியின் அந்த பகுதியில் வேறொரு கப்பலும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!